மக்களை காக்க நடமாடும் மருத்துவமனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மழைக்கால  நோய்களில் இருந்து மக்களை காக்க நடமாடும் மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜி.ேக.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. பரவலாக தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குன்யா, சளி, இருமல், காய்ச்சல் மற்றும் ‘மெட்ராஜ் ஐ’ என்று சொல்லக் கூடிய கண் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் மருத்துவமனைகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்தி மழைக் காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: