கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை அடையாறில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பாஜ ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும். இந்த நேரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Stories: