×

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் புழல் சிறைக்கு மாற்றம்

கோவை: கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் நேற்று மதியம் கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை அழைத்து செல்லப்பட்டனர். சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (29) பலியானார். இதுதொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடக்க உள்ளது.
 
இதற்கிடையே கோவை சிறையில் உள்ள 6 பேரிடமும் கோர்ட்டில் அனுமதி பெற்று சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்களை திரட்டினர். இந்நிலையில், மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக கோவை சிறையில் உள்ள 6 பேரையும் நேற்று மதியம் 12.45 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்து சென்றனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆதாரங்களை அழிக்க முயற்சி: முபின் வீட்டில் பறிமுதல் செய்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐஎம்ஓ என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது. வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரிக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்கள் அடங்கிய ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்து உள்ளனர்என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Tags : Coimbatore ,Puzhal Jail , 6 arrested in Coimbatore car blast case shifted to Puzhal Jail
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு