வேலூரில் பரிதாப முடிவு காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை

வேலூர்:  வேலூர் தொரப்பாடி பெரியஅல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(35). வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(32). இவரும் அதே மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். செல்வகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி. காயத்ரி கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், சொந்த வேலையாக செல்வகுமார் டெல்லி சென்றிருந்தாராம். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை போன் மூலம் மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் போனை எடுக்காததால், தூங்கிக் கொண்டிருப்பார் என்று நினைத்துள்ளார். மீண்டும் மதியம் 1 மணியளவில் மனைவி காயத்ரியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த செல்வகுமார், விமானத்தில் அவசரமாக நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பியுள்ளார். வீட்டின் கதவை தட்டியும் மனைவி திறக்காததால், வீட்டு உரிமையாளர் வீட்டு வழியாக நுழைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது காயத்ரி சீலிங் பேனில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பாகாயம் போலீசார், நடத்திய விசாரணையில் கணவனும், மனைவியும் பணி காரணமாக சேர்ந்திருக்கும் நேரம் குறைவு என்பதுபற்றி அடிக்கடி காயத்ரி விரக்தியில் பேசி வந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

Related Stories: