ஏரிக்குள் பாய்ந்த கார்: பாஜ நிர்வாகி தப்பினார்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). பாஜ மாவட்ட துணை தலைவர். இவர் நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டைக்கு முத்துப்பேட்டை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் தனது காரில் புறப்பட்டார். காரை, கணேசன் என்பவர் ஓட்டினார். மங்கள் ஏரி அருகே வளைவில் திரும்பும்போது கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்தது.

இதில் காரின் முன்பக்க கதவு திறக்க முடியாதபடி மூழ்கியதால் பின் பகுதி கதவை உடைத்து கொண்டு இருவரும் மேலே வந்தனர். இதில் காயமடைந்த இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரை மீட்டனர்.

Related Stories: