×

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும்.

ஏப்ரல் 6 - தமிழ்
ஏப்ரல் 10- ஆங்கிலம்
ஏப்ரல் 13 - கணக்கு
ஏப்ரல் 17 -அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி தேதியன்று முடிவடையும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத்தவுள்ளனர். 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

மார்ச் 13 - தமிழ்
மார்ச் 15 ஆங்கிலம்
மார்ச் 17- கணினி அறிவியல், உயிரி வேதியல், மனையியல்
மார்ச் 21 இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 3 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.


Tags : Minister ,Anil Maheesh , 10th, 11th, 12th general exam date announcement: Minister Anbil Mahesh released the schedule
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...