×

கொடைக்கானலில் தொடர் மழையால் முட்டைக்கோஸ் விவசாயம் பாதிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முட்டைக்கோஸ் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் வெள்ளைப் பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் தற்போது அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முட்டைக்கோஸ் விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் முட்டைக்கோஸ் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

Tags : Kodakianal , Kodaikanal: Cabbage farming has been affected due to continuous rains in Kodaikanal.
× RELATED வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள்...