சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் சாரல் மழையிலும் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்-விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

ஏலகிரி : சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் சாரல் மழையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், மகிழ்ச்சியோடு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை, பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ளது. ஏலகிரி மலை உயர்ந்த மலைப்பகுதியில் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் மத்தியில் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி  ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு படகு இல்லம், சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், இயற்கை பூங்கா, சுவாமி மலை ஏற்றும்,மங்களம், தாமரைக் குளம், கதவநாச்சி அம்மன் கோயில், செல்பி பார்க் ஆகியவை ஏலகிரி மலையில் கண் கவரும் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏலகிரி மலையில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் மகிழ்ச்சியோடு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் தற்போது மழை காலம் என்பதால் சுற்றுலா தலங்களும், பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், பறவைகள் சரணாலயத்திலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் சென்று வருகின்றனர்.  மேலும் படகு இல்லத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை முகம் சுழிக்கும் வகையில் உள்ளதால் இதனை பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: