விண்வெளி இனப்பெருக்க ஆய்வில் அடுத்தக்கட்டத்தை எட்டிய சீனா: விண்வெளிக்கு 2 குரங்குகளை அனுப்ப திட்டம்

பெய்ஜிங்: சீனா உருவாக்கியுள்ள டியாங் காங் விண்வெளி நிலையத்திற்கு ஒரு ஜோடி குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை சூழலில் உயிரினங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான ஆய்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் இனச்சேர்க்கைக்கான சாத்தியம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்வெளியின் உயிர்கள் இனப்பெருக்கம் மேற்கொண்டால் ஏற்படும் விளைவை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நடைபெற உள்ள இந்த பரிசோதனைக்காக ஒரு ஜோடி குரங்குகளை தங்கள் நாட்டின் மிதக்கும் விண்வெளி ஆய்வு நிலையமான டியாங் காங்கிற்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர். உயிர்களின் இனப்பெருக்க ஆய்வுக்காக தற்போது வரை மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போது குரங்குகளை அனுப்ப சீன விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: