×

நடுக்கும் குளிர்... நனைக்கும் சாரல் சுற்றிப்பார்ப்பதற்கு வழியின்றி சுற்றுலாப்பயணிகள் அப்செட்-கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் சாரல் மழை, கடும் குளிர் என காலநிலை மாறி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பகலில் தொடரும் மழையால், சுற்றிப் பார்க்க வழியின்றி சுற்றுலாப்பயணிகளும் ஏமாற்றமடைகின்றனர்.‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. பிற்பகலில், கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் நிலவியது. மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர்.

ஆனால் பகல் முழுக்க பெய்யும் மழை, பிற்பகலில் கிடுகிடுக்க வைக்கும் குளிர் காரணமாக, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் சென்று கொண்டாடி ரசிக்க முடியாமல் ஏமா்ற்றமடைந்தனர். தற்போது கடும் குளிர் நிலவுவதால், கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

Tags : Abset-Kodaikanal , Kodaikanal: In Kodaikanal, the normal life of the public has been affected due to the changing weather conditions such as heavy rains and extreme cold. during the day
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்