ராஜஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது 'புஷ்கர் திருவிழா': சுற்றுலாப் பயணிகளின் கண்களை கவரும் மணற்சிற்பங்கள்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கோட்டைகள், அரண்மனைகள், கலாச்சாரம், விதவிதமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு கணிசமான வருவாய் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இதற்காக அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான மணற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புஷ்கர் திருவிழாவை ஒட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராட்சத பலூன் சவாரி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. விழாவில் பங்கேற்றுள்ள வெளிநாட்டினரை மகிழ்விப்பதற்காக ஒட்டக ரத சவாரிக்கும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. மேலும் காற்றாடி திருவிழா, ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ராஜஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

Related Stories: