×

எரிசக்தித் துறை சார்பில் கட்டப்பட்ட 14 துணை மின் நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 373 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களையும், 91 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 57 துணை மின் நிலையங்களில், 723 எம்.வி.ஏ அளவிற்கு உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும், 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் உயரிய நோக்குடன்,  தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்,  ஈரோடு மாவட்டம் - ஈரோட்டில் 80 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230 கி.வோ தரம்  உயர்த்தப்பட்ட துணை  மின் நிலையம் (Gas Insulated Substation); திருவள்ளூர் மாவட்டம் - பாப்பரம்பாக்கம் சிட்கோ செம்பரம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் - மேல்பாடி  ஆகிய இடங்களில் 46 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய 110  கி.வோ துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் - அனகாபுத்தூர்; சென்னை மாவட்டம் - மில்லர்ஸ் சாலை, கண்ணம்மா பேட்டை (எம்.ஆர்.சாலை), கார்ப்பரேஷன் காலனி, வடபழனி, தாமோதரன் தெரு, கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் 219 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 33 கி.வோ துணை  மின் நிலையங்கள் (Gas Insulated Substation); காஞ்சிபுரம் மாவட்டம் - விளாகம்;

திருவள்ளுர் மாவட்டம் - பொன்னியம்மன் நகர் மற்றும் வேலூர் மாவட்டம் -  மடையப்பட்டு ஆகிய இடங்களில் 26 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 33 கி.வோ துணை  மின் நிலையங்கள்; என மொத்தம் 373 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் - முடிச்சூர்; சென்னை மாவட்டம் - பள்ளிக்கரணை, எழில் நகர், சின்மயா நகர்; கோயம்புத்தூர் மாவட்டம் -காடுவெட்டிபாளையம்; கடலூர் மாவட்டம் - குறிஞ்சிபாடி; தர்மபுரி மாவட்டம் - வெள்ளிச்சந்தை; திண்டுக்கல் மாவட்டம்-வத்தலகுண்டு,  தாமரைப்பாடி; ஈரோடு மாவட்டம் - பூனாச்சி;

கள்ளக்குறிச்சி மாவட்டம் - நாகலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், எடுத்தவைநத்தம்;  காஞ்சிபுரம்  மாவட்டம் - தாமல், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்; கன்னியாகுமரி மாவட்டம் - நடைக்காவு, எஸ். ஆர்.புதூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் - சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, பர்கூர்; மதுரை மாவட்டம் - ஒத்தக்கடை, இலந்தைக்குளம், எல்லிஸ் நகர்; மயிலாடுதுறை மாவட்டம் - மேமாத்தூர்; நீலகிரி மாவட்டம் - ஊட்டி; பெரம்பலூர் மாவட்டம் - தேனூர், ஏ.மேட்டூர்; புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டை  சிப்காட், கறம்பக்குடி; தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை நகரம், மணிமண்டபம், சேதுபாவாசத்திரம், மின்னகர், ஊரணிபுரம், ஒக்கநாடு கீழையூர்; தேனி மாவட்டம் - போடிநாயக்கனூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - அளுந்தூர்;

திருப்பத்தூர் மாவட்டம் - சின்னவரிகம்; திருவள்ளூர் மாவட்டம் - பெரியபாளையம், மாத்தூர், திருமுல்லைவாயில்; திருவண்ணாமலை மாவட்டம் - மாங்கல், வேட்டவலம், வந்தவாசி;  திருப்பூர் மாவட்டம் - இந்திரா நகர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், கோட்டமங்கலம்; தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீ மூலக்கரை, தூத்துக்குடி தானியங்கி; வேலூர் மாவட்டம் - ஓடுகத்தூர், கர்ணம்பட்டு, பேர்ணாம்பட்டு; இராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு; விழுப்புரம் மாவட்டம் - வளவனூர்; விருதுநகர் மாவட்டம் - ஜி.என்.பட்டி ஆகிய இடங்களில் உள்ள 57  துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரிக்கும்  பொருட்டு  91 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில்  நிறுவப்பட்டுள்ள 57 மின் மாற்றிகளின் திறன் உயர்த்தி, அதன் செயல்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம் - நெல்லித்தோப்பு; கரூர் மாவட்டம் - ஒத்தக்கடை (தரம் உயர்த்துதல்) தென்னிலை, சின்ன பனையூர், பவித்திரம்; அரியலூர் மாவட்டம் - திருமழபாடி; தஞ்சாவூர் மாவட்டம் - அதிராம்பட்டினம், திருநாகேஸ்வரம் ஆகிய இடங்களில், 130 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ்சந்த் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  திரு.மா.இராமச்சந்திரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் (பகிர்மானம்)  திரு.மா.சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Energy Department ,K. Stalin , Chief Minister M. K. Stalin inaugurated 14 sub-stations built by the Department of Energy
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...