டுவிட்டரைத் தொடர்ந்து மெட்டாவும் ஆட்குறைப்பு நடவடிக்கை: செலவீனங்களை குறைக்க தீவிர திட்டம்..!!

அமெரிக்கா: உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும், ஆட்குறைப்பு செய்ய இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கிய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், செலவீனங்களை குறைக்கும் நோக்கில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இந்நிலையில் எலான் மஸ்க்கின் வழியை பின்பற்றி பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

விளம்பர வருவாய் குறைவு எதிரொலியாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ஓசையில்லாமல் ஆட்குறைப்பை தொடங்கியிருக்கிறது. மெட்டாவின் பங்குதாரர் நிறுவனமான அல்டிமெட்டேட் கேபிடல் மேனேஜ்மெண்ட் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்றும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து சுமார் 12,000 ஊழியர்களை பல்வேறு கட்டங்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவு செய்திருப்பதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டிருக்கிறது.

பல்வேறு ஊழியர்கள் செயல்பட்டு திருப்திகரமாக அமையவில்லை என்று கருதப்படும் நிலையில், பலரும் நிறுவனத்தில் வேறு பொருத்தமான பணிகளை தேடி கொள்ளவோ, அல்லது நிறுவனத்தில் இருந்து விலகவோ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சர்வதேச தேக்கு நிலை அச்சம் காரணமாக கடந்த வாரம் மெட்டா நிறுவனம் புதிய ஊழியர்களை நியமித்ததை நிறுத்தி வைத்தது. இதையடுத்து ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: