சோழவரம் ஏரி அருகே பராமரிப்பின்றி பாழாகும் விருந்தினர் மாளிகை: விஐபிகள் தங்கிய கட்டிடம்

புழல்: சோழவரம் ஏரி அருகே நல்லூரில் ஏரியை ஒட்டியபடி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை, பின்னர் அரசு விருந்தினர் மாளிகையாக பயன்பாட்டில் இருந்தது. தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமாகி வருகிறது. இதை புதுப்பித்து நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சோழவரம் ஏரி அருகே நல்லூரில் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் விவிஐபிக்கள் தங்க கட்டப்பட்டது.

பின்னர் நாடு சுதந்திரமடைந்ததும், தமிழக அரசின் விருந்தினர் மாளிகையாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த மாளிகையில் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் உள்பட பல்வேறு முக்கிய விவிஐபிக்கள் வந்து தங்கி, சோழவரம் ஏரியின் அழகை கண்டு ரசித்துள்ளனர். இதையடுத்து சோழவரம் ஏரியை பார்வையிட வரும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் தங்கியுள்ளனர். பின்னர், இந்த பழமையான விருந்தினர் மாளிகை நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி, தற்போது பழுதாகி சேதமடைந்து வரும் நிலையில் உள்ளது.

விருந்தினர் மாளிகைக்கு மேலாளர், வாட்ச்மேன் என யாரும் இங்கு இல்லை. கொலை சம்பவம் நடந்தால் கூட அளவிற்கு மிகவும் பாழடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இன்றி பாழடைந்த பங்களாவைபோல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்த பாரம்பரியமிக்க பழைய விருந்தினர் மாளிகையை முறையாக சீரமைத்து, அக்கட்டிடத்தை புதுப்பித்து நினைவு சின்னமாக மாற்றினால், இங்கு ஏராளமான மக்கள் பார்வையிடும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: