உத்தரகாண்டில் நிலநடுக்கம்

டேராடூன்: உத்தரகாண்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெக்ரி என்ற பகுதியில் நேற்று காலை 8.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.  இதனால் பீதியில் மக்கள் பதறியடித்து வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கமானது டேராடூன், தெக்ரி, உத்தர்காசியில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

Related Stories: