இரட்டை இன்ஜின் அரசு மோசடி பாஜ.விடம் இருந்து மக்களை காப்போம்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: ‘குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பாஜ.வின் இரட்டை இன்ஜின் அரசு மோசடியில் இருந்து மக்களை காப்போம்,’ என ராகுல் காந்தி தெரிவித்தார். பாஜ ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மும்முனை போட்டி நடக்கும் குஜராத்தில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரசாரத்தில் சூடு பறக்கிறது.

இதனிடையே, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு காஸ் சிலிண்டர், 10 லட்சம் இளைஞர்களுக்கு  வேலை, ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பாஜ.வின் இரட்டை இன்ஜின் அரசு மோசடியில் இருந்து மக்களை காப்போம். மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழா கொண்டாடப்படும்,’  என தெரிவித்துள்ளார்.

Related Stories: