×

‘ஸ்கை’ அதிரடி அரைசதம் ஜிம்பாப்வேயை பந்தாடியது இந்தியா: 2வது பிரிவில் முதலிடம்

மெல்போர்ன்: உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று 2வது பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால், சம்பிரதாயமாக நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது.  கே.எல்.ராகுல் 51 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் 15, விராத் 26, பன்ட் 3, ஹர்திக் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர். சூரியகுமார் யாதவ் 61 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  

ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஷான் வில்லியம்ஸ் 2, சிக்கந்தர், முஸரபானி, என்காரவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 17.2 ஓவரில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பர்ல் 35 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), சிக்கந்தர் 34 ரன் (24 பந்து, 3 பவுண்டரி) எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 3, ஹர்திக், ஷமி தலா 2, புவி, அர்ஷ்தீப், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சூரியகுமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2வது பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் 12 சுற்றில் 4 வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Sky ,Zimbabwe ,India , 'Sky' action half-century, India beat Zimbabwe, top in Division 2
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு