தமிழக அரசில் ஆளுநரின் குறுக்கீடு இருக்கக்கூடாது: பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்

விழுப்புரம்:  விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி எம்பி நேற்று அளித்த பேட்டி: ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஜனநாயக அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிர்வாகமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் இருக்கும். ஆளுநர் இதில் குறுக்கிடவும், எதிர்ப்புக் காட்டவும் கூடாது. ஆளுநரின் பணி என்பது அரசால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை, தேவைப்பட்டால் ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை அரசிடம் தெரிவித்து, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜ ஆளாத மாநிலங்களில் அங்கு பொறுப்பிலிருக்கின்ற ஆளுநர்கள் எதிரான போக்கை கடைப்பிடிக்கின்றார்கள். இதனால் மாநில மக்களுக்கு நன்மை கிடைக்காது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் அது சட்டமாகும். எனவே மாநில முதல்வரும், ஆளுநரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: