நம்பர் பிளேட் இல்லாத கார் மோதி விபத்து; ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி கொலை?: கர்நாடகாவில் பரபரப்பு

மங்களூரு: மங்களூருவில் நம்பர் பிளேட் இல்லாத கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரி மரணம் அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவில் உதவி இயக்குநராக ஆர்.எஸ்.குல்கர்னி (83) என்பவர் பணியாற்றினார்.

ஓய்வுபெற்ற அவர், மங்களூரு அடுத்த மானசா கங்கோத்ரி அருகே வழக்கம் போல் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் ஆர்.எஸ்.குல்கர்னியை மீட்டு மருத்துவமனைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த ஜெயலட்சுமி நகர போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆர்.எஸ்.குல்கர்னி மீது மோதியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: