×

தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்  கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் போல இதுவும் அறிவு சார்ந்த விஷயம். ஜனவரி மாதம் 16ஆம் முதல் 18ஆம் தேதி வரை இந்த பன்னாட்டு புத்தகம் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் உலகளாவிய புத்தகங்களை நாம் பெறுவதற்கும், நமது தமிழ் இலக்கியத்தை மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் பெறுவதற்கும் இது பெரிதும் வழிவகை செய்யும் என தெரிவித்தார். இதற்காக 50 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.  பெரும்பாலான நாட்டை சேர்ந்தவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழ் படைப்பாளிகளின் எழுத்துக்கள் உலகம் முழுக்க சென்றடையும். 58 அரசு பள்ளிகளில் 190 மாணவர்கள் தேர்ந்தெடுத்து தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். இதில் மாணவிகள் அதிக அளவில் இருக்கின்றனர். எஸ்சி எஸ்டி மாணவர்களும் இதில் இருக்கிறார்கள். கல்வி மட்டுமே நமக்குள் சமத்துவத்தை ஏற்படுத்தும். நல்ல கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதும், நல்ல படைப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags : IID , A total of 87 government school students studied through TADCO and selected to study in IITs: Minister Anbil Mahesh informed
× RELATED மாணவர் தற்கொலை விவகாரம்; ஐஐடி பேராசிரியர் சஸ்பெண்ட்