×

கோடியக்கரை அருகே படகு பழுதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் படகு பழுதானதால் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன்காலமாகும். இங்கு மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள தங்கி மீன் பிடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஐந்து பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும்போது 4ம் தேதி தேதி மாலை படகு பழுதானதால் கடலில் ஐந்து மீனவர்களும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் மற்றும் மீன்துறை அலுவலர் நடேசராஜா ஆகியோருக்கு தகவல் அளித்தனர். கடலில் சுமார் 15 மணி நேரம் தத்தளித்த மீனவர்களை 5ம் தேதி காலை வந்த கடலோர காவல் படையினர் படகில் இருந்த படகோட்டி முகிலன் மற்றும் கவுதமன் உள்ளிட்ட ஐந்து மீனவர்களையும், படகையும் மீட்டு நாகை துறைமுகம் சென்று படகு உரிமையாளர் அண்ணமலையிடம் ஒப்படைத்தனர்.


Tags : Kodiyakar , 5 fishermen who were stranded in the sea after boat broke down near Kodiakkarai were rescued
× RELATED நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற...