தனியார் ஷூ நிறுவனத்தின் சொத்துவரி விவகாரம் நிலத்தை புதிதாக அளந்து மதிப்பீடு செய்ய திருவள்ளூர் பிடிஓவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குட் லெதர் ஷூ நிறுவனம் பஞ்சாயத்து வரி தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடுகாடு கிராம பஞ்சாயத்து சார்பில் வழக்கறிஞர் வி.ரகுபதி ஆஜராகி, மனுதாரருக்கு சொத்து வரியை செலுத்த போதிய அவகாசம் கொடுத்தும் அவர் கட்டவில்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் ரூ.2 லட்சத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு பிடிஓ சம்பந்தப்பட்ட இடம் மற்றும் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரர் நிறுவனத்துக்கு உரிய வாய்ப்பளித்து 6 வாரங்களுக்குள் சொத்து வரியை மதிப்பீடு செய்ய வேண்டும். எனவே, மனுதாரருக்கு தொடுகாடு கிராம பஞ்சாயத்து அனுப்பிய நோட்டீசுகள் ரத்து செய்யப்படுகின்றன. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’’  என்று உத்தரவிட்டார்.

Related Stories: