ஏ.எம்.விக்கிரமராஜா தகவல் சிங்கப்பூரில் நாளை தொழில்-வணிக கருத்தரங்கம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நேற்று முன்தினம் (4ம் தேதி) மலேசியாவில் சிலாங்கூர் சேம்பர்ஆப் காமர்ஸ் நடத்திய உலகளாவிய தொழில் வணிக கருத்தரங்கில், தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர் அமைப்பு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது: தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இந்நிகழ்வு பெரிதும் பயன்படும். இதுபோன்று பல நாடுகளில் இளம் தொழில் முனைவோர் அமைப்பு, தொழில்-வணிக கருத்தரங்கம் நடத்தப்படும். நாளை (7ம் தேதி) இதுபோன்ற கருத்தரங்கம் சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. அதில் சிங்கப்பூர் கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எட்வின்டோங் சுன்பாய் பங்கேற்க உள்ளார்.

Related Stories: