அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும்: தமுமுக பொதுக்குழு தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுக்குழுவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளவை பரிசீலித்து, குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடி வரும் தண்டனை சிறைவாசிகள், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும். கோவை வன்செயலுக்கு கண்டனம். பொது சிவில் சட்ட அபாயத்தை தமிழக அரசு களைய வேண்டும். தமிழகத்தின் சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: