×

அந்தமானில் இன்று திமுக முப்பெரும் விழா

சென்னை: ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் அந்தமான் மாநில திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடக்கிறது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்கிறார். இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அந்தமான் மாநில திமுக சார்பில் முப்பெரும் விழா அந்தமான் மாநில திமுக அமைப்பாளர் குழந்தை தலைமையில், மாநில அவைத்தலைவர் மருதவாணன் முன்னிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போர்ட்பிளேயர் மூவர்ண திடலில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார். ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பேரணியாக புறப்பட்டு, அந்தமான் மாநில திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து புறப்படும் பேரணி, மூவர்ண திடலில் முடிவடையும். பின்னர், அங்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் அந்தமான் மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் உரையாற்றுவார்கள். நிறைவாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விழா சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழாவில் அந்தமான் மாநிலத்தில் உள்ள அமைப்புகளின் திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Andaman , DMK triple celebration today in Andaman
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி