வனத்துறை ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர்கள் ராமர், லட்சுமணன். விவசாயிகளான இருவரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருவில்லிபுத்தூர் வனத்துறை பாரஸ்டர் பாரதி மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: