×

அரசு பள்ளி மாணவர்களின் படிப்பில் பள்ளி கல்வித்துறைக்கு உதவியாக இருக்கும் ஐஐடி: அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்கள்  நோக்கம். அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தின் கீழ் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்த 45 அரசு மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி, பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், செயலர் காகர்லா உஷா, ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மகேஷ், அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று மேலும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு இது உதவியாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி. இது போன்ற மேலும் அறிவிப்புகள் உங்களிடமிருந்து வரும்போது அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம் என கூறினார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில்: 87 மாணவர்கள் என்பது வெறும் 33 சதவிகிதம் தான். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். நான் இயக்குனராக பொறுப்பு ஏற்றதற்கு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு இது. இது சாதாரண படிப்பு கிடையாது. இன்னும் 10 வருடத்தில் டேட்ட சயின்ஸில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படும். தற்போது பிஎஸ் படிப்பிற்கு தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் உங்களுக்கு பின்னால் வரும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களையும் இதுபோன்ற படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IIT ,Minister ,Mahesh Poiyamozhi , IIT is helping the school education department in the studies of government school students: Minister Mahesh Poiyamozhi praises
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...