தண்டவாளத்தில் பாறாங்கல் குமரியில் ரயிலை கவிழ்க்க சதியா?

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மோதி இந்த பாறாங்கல் தெறித்தது. ரயில் இன்ஜின் டிரைவர் இதுபற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: