ரஷ்யா ஓட்டலில் துப்பாக்கிச்சூட்டால் பயங்கர தீ: 13 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் தூப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பிக்க முயன்றனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் 250 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் 13 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தேடி வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில், ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள லேம் ஹார்ஸ் இரவு விடுதியில் அடையாளம் தெரியாத நபர் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: