×

கோஹ்லி 34!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லி நேற்று தனது 34வது பிறந்த நாளை மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினார். ரசிகர்கள், இந்திய செய்தியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சக வீரர்கள் சார்பில் தனியே ஒரு கேக் ரிஷப் பன்ட் வசம் தயாராக இருப்பதாகவும், வலைப்பயிற்சி முடிந்ததும் அதை வீரர்கள் அறையில் வைத்து வெட்டிக் கொண்டாடப் போவதாக ஆர்.அஷ்வின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் பிரபலங்கள், ரசிகர்கள் கோஹ்லிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். எம்சிஜியில் கேக் வெட்டியதும் பேசிய கோஹ்லி, ‘நான் இன்னொரு கேக்கை நவம்பர் 13ம் தேதி வெட்டிக் கொண்டாட விரும்புகிறேன்’ என்று உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டார்.


Tags : Kohli , Kohli is 34!
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...