கெஜ்ரிவால் என்னிடம் ரூ.500 கோடி கேட்டார்: சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதிக்காக ரூ.500 கோடி திரட்ட கூறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார். பெங்ளூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் டெல்லி துணைநிலை ஆளுனர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஆம் ஆத்மியின் சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி பெறுவதற்காக நான் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளேன்,’என்று குறிப்பிட்டிருந்தார். இதை ஆம் ஆத்மி மறுத்தது.

இந்நிலையில், சுகேஷ் மீடியாக்களுக்கு எழுதியபுதிய  கடிதத்தில், ‘தென்னிந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியில் எனக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கு  ரூ. 50 கோடி அளித்தேன். நாட்டிலேயே நான் தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரன் என்கிறார் கெஜ்ரிவால். பிறகு ஏன் என்னிடம் இருந்து 50 கோடி பெற்றுக்கொண்டு எம்பி சீட் கொடுப்பதாக உறுதி அளித்தீர்கள்? அது உங்களை மிக பெரிய ஏமாற்றுக்காரனாக மாற்றவில்லையா? மேலும், தேர்தல் நிதிக்காக ரூ.500 கோடி திரட்டும்படி கெஜ்ரிவால் என்னை கட்டாயப்படுத்தினார்,’ என்று குற்றம் சாட்டினார்.

Related Stories: