×

திருப்பதியில் கைசிக துவாதசி உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உக்கிர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் உக்கிர சீனிவாசமூர்த்தியை, வெங்கடதுரைவார்’ என்றும் அழைப்பர். வீதி உலா முடிந்ததும் உற்சவர்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கோயில் உள்ளே கருடாழ்வார் சன்னதி அருகே காலை 7 மணி அளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.

* ஏழுமலையான் கணக்கில் ரூ.15,000 கோடி டெபாசிட்
திருமலை தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயிலின் வங்கி முதலீடு தொடர்பான வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை 24 வகையான தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.13,025.09 கோடி முதலீடு செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 2022ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை ரூ.15,938.68 கோடி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,387.56 கிலோ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,952.18 கிலோ தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ.7,339.74 கிலோ வங்கியில் தங்கம் முதலீடு செய்யப்பட்டது. தற்போது வரை 2022 ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை எஸ்பிஐ வங்கியில் ரூ.9,819.38 கிலோவும், ஐஓபி வங்கியில் ரூ.438.99 கிலோ என மொத்தம் ரூ.10,258.37 கிலோ தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Kaisika ,Ukra Srinivasa Murthy Road ,Tirupati , Kaisika Duvadasi Ukra Srinivasa Murthy Road in Tirupati
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது