உபி.யில் எம்எல்ஏ மகன் திடீர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பணமோசடி வழக்கில் எம்எல்ஏ முக்தர் அன்சாரியின் மகன் அப்பாசை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவ் சட்டமன்ற தொகுதியின் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ முக்தர் அன்சாரி. இவர் பெரிய  தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 5 முறை எம்எல்ஏவான இவர்  தற்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 49 கிரிமினல் வழக்குகளில் முக்தர் அன்சாரிக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து இவரை கண்காணித்து வருகிறது. இவருக்கு எதிராக உத்தரப்பிரதேச காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் முக்தர் அன்சாரிக்கு எதிராக பண மோசடி வழக்கை பதிவு செய்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் கடந்த மாதம் அன்சாரியின் ரூ.1.48 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாசிடம் பிரயக்ராஜில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்தனர்.

Related Stories: