×

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தியில் மருத்துவ படிப்பு: மாநில அமைச்சர் தகவல்

டேராடூன்: மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்தி மொழியை ஊக்குவிக்கம் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை (எம்பிபிஎஸ்) இந்தியில் படிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும், ஆதரவு குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்திற்கு அடுத்ததாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர்  தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்:
இந்தி மொழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்கான பாடத்திட்டங்களை முறைப்படுத்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.எம்.எஸ்.ராவத் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் எம்பிபிஎஸ் இந்தி பாடத்திட்டத்தை ஆய்வு செய்த பின்னர், உத்தரகாண்ட் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும்’ என்றார்.


Tags : Uttarkhand , Madhya Pradesh, Uttarakhand, Medical Course in Hindi, State Minister Information
× RELATED உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி...