×

கோவை மாநகரில் ஐ.எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம்

கோவை: கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 6 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

கோவை மாநகர தனிப்படை போலீசார் கோவையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல பேரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம். அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Tags : I.A. ,Govai City S.S. , Coimbatore, I.S. Psychological Counseling for Teens on Terrorist Involvement
× RELATED போக்குவரத்து தொழிலாளர்கள்...