2 குழந்தைகள் உள்பட 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேஸ்வரம்: இரண்டு குழந்தைகள் உள்பட 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போது நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தம் வண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.

பின்னர் விசாரணையில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), இவரது மனைவி யோகேஸ்வரி(42), மகள்கள் தமிழ்மதி(22), கனிமதி(15), முல்லைத்தீவைச் சேர்ந்த புஷ்பம்(64), இவரது மகன் பிரபாகர்(43), யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின்(42), இவரது மனைவி அனுசுயா(31), இவர்களது மகள் அன்சிகா(3) மற்றும் மூன்று மாத கைக்குழந்தை அன்ஜிதன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களை மரைன் போலீசார் மேல் விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: