×

சென்னையில் 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைக்கால நேய் பாதிப்புகளை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி சென்னை மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூட்டாக பேசினர்.

சென்னையில் மழைநீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக மா.சுப்பிரமணியன் கூறினார். சிறப்பு மருத்துவ முகாம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் மழை வருவதற்குள் எங்கெங்கு மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டதோ, அங்கெல்லாம் அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். வரும் ஆண்டுக்குள் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவடையும் என்றும் அவர் உறுதியளித்தார். மாநகரில் அடுத்த 3 ஆண்டுக்குள் 8,500 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 


Tags : Chennai ,Rain ,Ministers ,K.K. N.N. Nehru ,Ma. Subramanian , Monsoon, special, medical, camp, minister, started, placed
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...