புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். புகார் கொடுத்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவு அளித்துள்ளனர். பொது நலன் கருதி அரசி அதிகாரிகள் தங்களது கடமையாய் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி எஸ்.சுப்பரமணியம் கூறியுள்ளார்.

Related Stories: