குன்னூர் இந்திரா நகரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

குன்னூர்:  குன்னூர் இந்திரா நகரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சேதமானது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால்  ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்திரா என்பவரது வீடு கனமழைக்கு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வருவாய் துறையினர் மழை பாதிப்பால் ஏற்படும் சேதம் குறித்து பார்வையிட்டனர். தொடர்ந்து குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Related Stories: