முதுமலை வனப்பகுதி சாலையோரங்களில் தின்பண்டங்களை வீசுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கும் அபாயம்

பந்தலூர்:  முதுமலை வனவிலங்கு சரணாலயம் பகுதியில் யானை, கரடி, காட்டுமாடு, முயல், மான், புலி, சிறுத்தைகள், குரங்கு, மந்தி குரங்குகள் உள்ளிட்ட அறியவகை வன உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகள் வாழ்விடமாக இருந்து வருகிறது.

தினமும் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிறப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் இரைத்தேடும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பண்டங்களை வீசி எறிவதால் வாகனங்களை பார்த்தவுடன் குரங்குகள் மற்றும் மந்திகுரங்குகள் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை சுற்றி வலைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வீசி எறியும் உணவுகளை ருசிப்பதற்கு குரங்குகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு  உணவுகளை கவ்விக்கொண்டு செல்வதால் சாலைகளில் செல்லும் பிற நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசி எரிவதை தவிர்க்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: