×

உடன்குடி அருகே தாங்கைகுளம் மறுகால் பகுதியில் உடைப்பு சீரமைக்க கோரிக்கை

உடன்குடி: உடன்குடி அருகேயுள்ள தாங்கை குளத்தின் உடைந்த மறுகால் பாயும் கலுங்கு பகுதியை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சியில் சுமார் 224.8ஏக்கர் பரப்பளவில் தாங்கைகுளம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதியான இந்த குளம் நிரம்பினால் சுமார் 2000ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன், கடல் நீர்மட்டம் விவசாய விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும்.

இக்குளத்தின் மூன்று புறத்தின் கரையை உயர்த்துவதுடன், குளம் நிரம்பி மறுகால் பாயும் கலுங்கு பகுதியை 2அடி உயர்த்தி உடைந்து பழுதடைந்த நிலையில் காணப்படும் கலுங்கு பகுதியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thangaikulam ,Ebenkudi , A request to repair the breach in the other leg of Thangaikulam near Ebenkudi
× RELATED இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல்...