தர்மபுரி-திருவண்ணாமலை வரை 4 வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி- திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தர்மபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி-திருவண்ணாமலை சாலையானது 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை, மதிகோன்பாளையம் அருகே ராஜாபேட்டை, குரும்பட்டி, சோலைக்கொட்டாய், கே.நடுப்பட்டி, மூக்கனூர், செம்மனூர் வனச்சாலை வரை 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தரை பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண்கொட்டி சீர்படுத்தல் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடக்கிறது. தர்மபுரி- அரூர் சாலையில் 4வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் ஊழியர்கள் போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

Related Stories: