×

எப்படியாவது இந்திய அணி அரையிறுதிக்குள் வர ஐசிசி விரும்புகிறது: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி குற்றசாட்டு

இஸ்லாமாபாத்: எப்படியாவது இந்திய அணி அரையிறுதிக்குள் வர ஐசிசி விரும்புகிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நவம்பர் 2-ம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய, வங்கதேச அணிகள் மோதியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது.

அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணி 16 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி கூறுகையில், ஐசிசி இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் ஐசிசி இந்தியாவுகு சாதகமாக செயல்படுகிறது எனவும் கூறினார்.

மேலும் எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புகிறது எனவும் எப்படியாவது இந்தியா அரை இறுதிக்குள் வர ஐசிசி செய்லபடுகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : ICC ,Indian ,Shakit Afridi ,Pakistan , ICC wants India to reach semi-finals somehow: Former Pakistan player Shahid Afridi alleges
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...