×

ஆர்.ஆர். கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை

சென்னை: ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கோட்டா ஹைவே டாங்க் மாவட்டத்தில் டியோளி அருகே  ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவமனையுடன் அமைந்துள்ள இந்த கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச். என்னும் கால்நடை மருத்துவ படிப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.

இந்த படிப்பில் சேர 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும். நீட் தேர்ச்சி தேவையில்லை. இந்த கால்நடை மருத்துவம் படித்தால் அரசு கால்நடை மருத்துவர், அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர், ஆகிய மத்திய மாநில  அரசு வேலைகளில் சேரலாம். மேலும் கால்நடை மருத்துவமனை அமைக்கலாம். இதில் ஆராய்ச்சி மேற்கொண்டால் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரியலாம் மற்றும் உள்நாடு, வெளிநாடு அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்பதால் மாணவ மாணவியர்களிடையே இந்த படிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படுகிறது. ஹைடெக் மாட்டுப் பண்ணை மற்றும் முயல் பண்ணைகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் கூடிய இந்த கல்லூரியில் பி.எச்.டி. முடித்த தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க முன்வந்துள்ளனர். கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி உட்பட வருட கட்டணம் ₹5 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே.

இந்தக் கல்லூரியில் சேர வருகிற 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தென்னிந்திய சேர்க்கை அலுவலகம் பெங்களூரு, தர்மபுரி, சென்னை, ஈரோடு, ஆகிய பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை மையத்தை www.rrvetcollege.org < http://www.rrvetcollege.org/ > என்ற இணையதளத்திலம், 96267 21411 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : College of Veterinary Medicine , RR Admission in Veterinary College
× RELATED சென்னையில் பருவநிலை மாற்றம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு