சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி ஆளுநர்

சென்னை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை புதுவையில் இருந்து நேற்று சென்னை வரும்போது செங்கல்பட்டு அருகே காட்டாங்கொளத்தூர் பகுதியில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்  விபத்தில் சிக்கி காயமடைந்து கிடப்பதை பார்த்தார்.

உடனே தனது காரில் இருந்த இறங்கிய தமிழிசை அவருக்கு முதலுதவி செய்தார். பின்னர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அருகே உள்ள பொத்தேரி தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தார். புதுவை ஆளுநரின் இச் செயலை பலரும் பாராட்டினர்.

Related Stories: