×

மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்தவர்களுக்கான இலவச பஸ் டிக்கெட் நாளை வழங்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்தவர்களுக்கு நாளை முதல் இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து இயக்கம் குறித்து நேற்று  காலை ஆய்வு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரத்தில் 2800 பேருந்துகளில் 1800 பேருந்துகளை இயக்குகிறோம்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் 780 பேருந்துகளில் 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் மற்றும் தேவைக்கு ஏற்ப  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மகளிருக்கான இலவச பயணத்திற்காக ₹1200  கோடி அரசு தந்துள்ளது. 3ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து  வசதி தரப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு டிக்கெட், அவரது  உதவியாளருக்கு ஒரு டிக்கெட், 3ம் பாலினத்தவருக்கு டிக்கெட் என தனித்தனி  நிறங்களில்  டிக்கெட் தரப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்தவர்களுக்கான இலவச பேருந்து டிக்கெட் புதன்கிழமையிலிருந்து தரவுள்ளோம். முதல்வர் ஏற்கனவே தேர்தல்  அறிக்கையில் அறிவித்துள்ளபடி பெண்கள்  இலவசமாக பயணித்து வருகிறார்கள்.  ஏற்கனவே, மே 16  முதல் ஜூன் 15 வரை எம்டிசியில் ₹1000 பஸ் பாஸ்  கொடுத்திருந்தோம். இன்னும் ஒரு மாதத்திற்கு அந்த பாசை வைத்து பயணிக்கலாம்.  பேருந்து தேவை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.  பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து நமது நிதி  அமைச்சர் பேசியிருக்கிறார். அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இப்போது இரவு 9.30 வரை  பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்து  இயக்கம் குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘‘நான்கு மாவட்டங்களில் இரவு 9.30 வரை  பேருந்துகள்  இயக்கப்படும். சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்து  இயக்கம்  குறித்து முதல்வர்  அறிவிப்பார்’’…

The post மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்தவர்களுக்கான இலவச பஸ் டிக்கெட் நாளை வழங்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister of Transport Information ,Chennai ,Minister of Transport ,Transport Minister ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...