குழந்தை, கட்டாய தொழிலாளர்கள் ஆள்கடத்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சென்னை: சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் குழந்தை தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆள் கடத்தல் குறித்து அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடன் கருத்து பரிமாற்றம் நேற்று நடந்தது. சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், நீதிபதி எஸ்.பாஸ்கரன் மற்றும் தமிழக மனித உரிமைகள் ஆணைய செயலாளர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர், நீதிபதி எஸ்.பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று (நேற்று) நடந்த கருத்து பரிமாற்ற கூட்டத்தில் அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடன் 2 நாடுகளிலும் இருக்கும் நடைமுறை பழக்கங்கள் அதில் எது சிறந்தது என்பதை பற்றியும் குழந்தை தொழிலாளர்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: