ஜிஎஸ்டி போட்டது ஒன்றிய அரசு தான் பால் விலையை குறைக்க சொல்வது வேடிக்கை: அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுகிறது

சென்னை: பால் விலையை  குறைக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆவின் பால்விலை உயர்வு தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ‘‘பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை, திரும்ப பெற வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ‘‘ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி.யை பாலுக்கு கூட போட்டாங்க. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு. பாலுக்கு கூட ஜி.எஸ்.டி.போட்டதன் விளைவாக விற்பனை விலை ஏறியுள்ளது’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கடந்த ஜூலை மாதம் பால் பொருட்களாக தயிர், லஸ்ஸி, பன்னீர் போன்றவற்றிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து பால் பொருட்களின் விலை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை அதிரடியாக உயர்த்தின. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்தார். இது கூட தெரியாமல் பாஜ தலைவர் அண்ணாமலை, பால் விலையை தமிழக அரசு தானாக உயர்த்திவிட்டதாக பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

Related Stories: