×

தொழிலதிபர் வீடு, ஆபிசில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: ஜார்க்கண்டில் ராணுவம், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த பண மோசடி விவகாரத்தை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. இதன் ஒருபகுதியாக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருங்கிய தொழிலதிபரான அமித் அகர்வாலின் ராஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 இடங்கள், கொல்கத்தாவில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அகர்வாலின் நெருங்கிய நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனுக்கு எதிராக பொதுநலன் மனு தாக்கல் செய்தவரின் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் குமாரை சிக்க வைக்க பொய் புகார் தெரிவித்த வழக்கில், கடந்த மாதம் அமலாக்கத் துறையால் அமித் அகர்வால்கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Enforcement Directorate , Enforcement Directorate raids businessman's house and office
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...