×

திகார் சிறை டிஜிபி சந்தீப் இடமாற்றம்

புதுடெல்லி:  சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது அம்பலமானதை தொடர்ந்து, திகார் சிறை டிஜிபி சந்தீப் கோயல் அதிரடியாக மாற்றப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த மோசடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கினார். டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ், கடந்த மாதம் டெல்லி டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு எழுதிய  கடிதத்தில், ‘திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10 கோடி, திகார் சிறை டிஜிபி சந்தீப் கோயலுக்கு ரூ.1.50 கோடி கொடுத்தேன்,’ என குறிப்பிட்டார். இது பரபரப்பை ஏற்பத்தியது. இந்நிலையில், திகார் சிறைத்துறை டிஜிபி சந்தீப் கோயல் திகார் சிறையில் இருந்து நேற்று பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சஞ்சய் பெனிவால் புதிய டிஜிபி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Tags : Tihar ,DGP ,Sandeep , Tihar Jail DGP Sandeep Transferred
× RELATED என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி...